யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்­வ­ர­ரான வர்த்­தகர் இஷான் அப்­துல்­ அஸீஸ்  இலண்டனில் வசித்து வருகின்றார்.

இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார்.

'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்று எனக்கு தெரியாது.

 இதனையடுத்து நீதி­மன்றில் கூறி­யதால் நீதிமன்றம், அவர் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த யுவதி இர­வு­நேர விருந்து நிகழ்­வொன்றில் மது அருந்­திய பின்னர் குறித்த ­வீட்­டி­லேயே உறங்­கி விழித்­தெ­ழுந்­த­போது, தனக்கு மேல் அப்­துல்­ அஸீஸ் கிடந்­த­தா­கவும் தான் வல்­லு­ற­வுக்­கு­ட்படுத்­தப்­பட்­ட­தா­கவும் முறைப்­பாடு செய்ததையடுத்தே இவ்வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த யுவ­தியின் நண்­பி­யான 24 வய­தான யுவ­தி­யொ­ரு­வ­ருடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறிய அப்துல் அஸீஸ், தான் 18 வய­தான யுவ­தி­யுடன் தான் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வில்லை எனக் கூறியபோதிலும் குறித்த யுவ­தியின் அந்­த­ரங்கப் பகு­தியில் அப்துல் அஸீஸின் மர­ப­ணுக்கள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டமையும் குறிப்பிடத்தக்கது.