அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை (Firefly) தனது ஆல்பா ராக்கெட்டை வியாழக்கிழமை மாலை முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.

ஆனால் ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே கலிபோர்னியா கடற்கரையான பசிபிக் பெருங்கடலுக்கு மேலான வான் பரப்பில் வெடித்து சிதறியுள்ளது.

வான்டன்பெர்க் விண்வெளிப்படை தளத்தில் உள்ள எஸ்.எல்.சி.-2 வளாகத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

ஆல்ஃபா ராக்கெட் முதல் நிலை ஏற்றத்தின்போது ஏற்பட்ட ஒழுங்கின்மை காரணமாக வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் டுவிட்டர் பவில் தெரிவித்துள்ளது.