கிரிபவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சேவை புரியும் பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 42 வயதுடைய திம்பிரிபொகுன மற்றும் அசோகபுர பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

திம்பிரிபொகுன பகுதியில் கொரோனா நோயாளி குறித்த தகவலை சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பார்க்கச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கிரிபவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது நீதிவான் அவர்களை செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.