சீனி மற்றும் அரிசிக்கான நிர்ணய விலை அடங்கிய அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் பொதிசெய்யப்பட்ட சீனியின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதிசெய்யப்படாத ஒரு கிலோ கிராம் சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒரு கிலோ கிராம் பொதிசெய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் பொதிசெய்யப்படாத ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியான வர்த்தமானியின் படி, கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அல்லது சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 103 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சை அரிசி கிலோ ஒன்றின் அதிகூடிய விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.