தென்னிந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்து வாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாக விரிவாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை செய்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் இந்திய சட்டபேரவையில் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு ,தொழில்வாய்ப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள்,தொடர்பாக நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம் மக்களுக்கு அறிவித்துள்ள நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதாவும்,இத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கும் பரிந்துரைப்பதாகவும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமுர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுடன் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பில் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதிப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிடமுன்னேற்ற கழகத்திற்குமிடையிலான உறவு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் மூலமும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மூலமும் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை பிறந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM