துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் இந்தியாவுக்கு தாரைவார்க்க முயற்சி ; வாசு  

Published By: Priyatharshan

13 Sep, 2016 | 08:28 AM
image

இலங்கையின் துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் இந்தியாவுக்கு தாரைவார்ப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் என்பது   இறையாண்மையை பாதிக்கும் செயலாகும் என கடும் ஆட்சேபனையை   மஹிந்த அணி ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

தெற்காசியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக எம்.பி. வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் பொருளாதாரத்தை இலங்கைக்கு முன்பதாக  விஸ்தரிப்பதில் அதிக நாட்டம் கொண்டு தற்போது நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.

அதேவேளை எமது நாட்டின் துறைமுகங்களையும் விமானநிலையங்களையும் இந்தியாவிற்கு வழங்கவுள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

துறைமுகங்கள், விமானநிலையங்கள் என்பன நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு பட்டவையாகும். எனவே அவற்றின் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும். அதனை வேறொரு நாட்டிற்கு வழங்கக்கூடாது. இலங்கையில் அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளானது இறையாண்மைக்கும் சுயாதீனத்திற்கும் ஆபத்தாக அமையும்.

அது மட்டுமல்ல இச்செயற்பாடானது எமது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமையும். தேசிய பாதுகாப்பிற்கும் பாதகமாக அமையும். மறுசீரமைப்பு என்ற செயலில் அரசு வளங்களையும் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட முக்கிய பொருளாதார மையங்களையும் இந்தியாவுக்கும் வேறு பல நாடுகளுக்கும் வழங்கும் கொள்கையையே   முன்னெடுக்கிறது.

தெற்காசியாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தமது பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ளும் முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கின்றது. நேபாளம், பூட்டான், மாலைத்தீவு மற்றும் இலங்கை என தனது பொருளாதாரத்தை விஸ்தரித்து முழு தெற்காசியாவிலும் தனது பலத்தை பலப்படுத்திக்கொள்ளவே இந்தியா முயற்சிக்கின்றது. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31