(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கும் மாபியாக்களை கட்டுப்படுத்தவும், நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்கவும் ஜனாதிபதி  அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இச்சட்டத்தினால்  நாட்டு மக்கள் இனி பயன்பெறுவார்கள்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காகவே அத்தியாவசிய பொருட்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்படும் அத்தியாவசிய பொருட்கள் இனி நிவாரண விலைக்கு அமைய விற்பனை செய்யப்படும் என  கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.