"ஜன சுவய" கருத்திட்டத்தின் கீழ் முப்பது இலட்சத்து முப்பது ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்கள் திருகோணமலை கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

May be an image of indoor and text that says 'OFFICE OF THE ADER o OPPOSITION විපක්ෂ නායක කාර්යාලය ජනතාවාදී විපක්ෂය மக்களுக்கான எசிர்க்கட்சி PEOPI எதிர்க்கட்சித் தலை அàு லகம் රාදී විපක්ෂය 1631 ජන පනතාවාදී மக்களு மக்களுக்கான PEOPLE'S OPPOSITION PEOPLE'S OPPO ජනතාවාදී විපක්ෂය மக்களுக்கான எதிர் க்கட்சி PEOPLE'S OPPOSITION පක්ෂය தர்க்கட் SITION ජනතාවාදී மக்களுக்கான PEOPLE'S OPPO විපක්ෂයෙන් හුස්මක් OPPOSITION නතාවාදී විපක්‍ෂය மக்களுக்கான எதிர்க்கட்சி PEOPLE'S OPPOSITION ාදී විපක්ෂය கான எதிர்க்கட்சி OPPOSITION ජනතාවාදී විපක්‍ෂය மக்களுக்கான எதிர்க்கட்சி PEOPLE'S OPPOSITION'

இதன் பிரகாரம் 275,000 ஆயிரம்  பெறுமதி வாய்ந்த Multiple Monitors உபகரணங்கள் இரண்டும், 1,240,000 ரூபா பெறுமதியான Optiflow Nasal Therapy உபகரணங்கள் இரண்டும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதோடு இதனை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் கரங்களால் கிண்ணியா ஆதார வைத்தியணாலையின் பனிப்பாளர் ஐ.எம்.ஜவாஹிரிடம் ஒப்படைக்கப்பட்டது.

May be an image of 2 people, people standing and indoor

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 23 கட்டங்களில் 680 இலட்சம் (68,874,000) ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியினர் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.