(எம்.மனோசித்ரா)

நாட்டினுள் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவுகின்ற அறிக்கைகளில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானளவு உணவு பொருட்கள் அரசாங்கத்தின் கைவசம் இருக்கிறது எனவே உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என அச்சமடைய வேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.