இந்தி  பிக்பொஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று  40 ஆவது வயதில் காலமானார். 

நடிகர் சித்தார்த் சுக்லா இந்தி பிக்பொஸ் 13-ம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் . ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, இரு படங்களில் நடித்துள்ளார். 2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014-ல் பொலிவுட்டில் அறிமுகமானார். 

இந்நிலையில் சித்தார்த் சுக்லா இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளார்.

அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சித்தார்த் சுக்லாவுக்கு தாயும் இரு சகோதரிகளும் உள்ளார்கள். 

சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பொலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.