யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்கள் சங்கத்திற்கும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பெற்றோர்களின் இரண்டு கோரிக்கைகளை பேராயர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

உடுவில் மகளிர் கல்லூரியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வது தொடர்பாக நேற்றுமுன்தினம் ஒன்றுகூடிய மாணவிகளின் பெற்றோர்களால் இவ்விடயங்களை கையாள்வதற்காக சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இச் சங்கத்தினூடாக தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய திருச்சபையின் பேராஜயர் டானியல் தியாகராஜாவுடன் பெற்றோர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்திருந்தனர். இதன்பிரகாரம் குறித்த பெற்றோர் குழாம் நேற்றுமுன்தினம் இரவு பேராயரை சந்திக்க முற்பட்டிருந்த போதும் அது கைகூடியிருக்கவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் காலை மீண்டும் பெற்றோர் குழாம் பேராயரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மூன்று கோரிக்கைகளும் பேராயரிடம் முன்வைக்கப்பட்டன.  

 போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது பாதிப்புக்எள் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் பழிவாங்கப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை கடுமையாக தாக்கியதுடன் அவர்களை தகாத வார்த்தைகளால் கண்டித்த ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இடம்பெறக்கூடாது என்றும் பேராயரிடம் பெற்றோர்கள்  கோரியிருந்தனர்.  

இந்நிலையில் சந்திப்பு  தொடர்பாக பெற்றோர் குறிப்பிடுகையில்,

இது தொடர்பாக பேராயர் நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்கு   சம்மதம் தெரிவிப்பதாகவும் உறுதியளித்ததார்.    ஒர் விடயத்தை மாத்திரம் பேராயர் ஏற்றுக்கொள்ளவில்லை.  . அதாவது   கல்லூரியில் முன்னர் பணியாற்றிய ஷிராணி மில்ஸ் மீண்டும் இரண்டு ஆண்டுகள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என நாம் முன்வைத்த கோரிக்கையை  மாத்திரம் பேராயர் ஏற்றுக்கொள்ளவில்லை.  

 பேராயரிடம் இவ் விடயம் தொடர்பாக மாணவிகளின் மனநிலையை  எடுத்துக்கூறியிருந்த போதும் அவர் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கவில்லை  இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக நாம் அனைத்து பெறறோர்களுடனும் கலந்துரையாடி முடிவொன்றை எடுக்கவுளளோம் என்றனர்.