(எம்.மனோசித்ரா)
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மினுவாங்கொடை, புதுக்குடியிருப்பு மற்றும் மாதம்பை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தினரால் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் , நில்பனாகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 48 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்ட விரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 57 வயதுடைய மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். மினுவாங்கொடை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் உடையார்கட்டு பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைத்தீவு முகாமினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மற்றும் 80 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் 40 மற்றும் 54 வயதுகளையுடைய உடையார்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாதம்பை பொலிஸ் பிரிவில் துன்முட்டுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தளம் முகாமினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 37.5 லீற்றர் சட்ட விரோத மதுபானம், 420 லீற்றர் கோடா உள்ளிட்டவற்றுடன் சந்தேநபரொருவர் கைது செய்யப்பட்டு மாதம்பை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முறுவ பிரதேசத்தை சேர்ந்தவராவர். மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM