bestweb

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் குறுஞ்செய்திச் சேவை விஸ்தரிப்பு

Published By: Vishnu

02 Sep, 2021 | 12:55 PM
image

கொவிட்-19 தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "1904" குறுஞ்செய்திச் சேவை தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத்  தெரிவித்தார்.

அதற்கமைய, கொவிட் தொற்றாளர்கள் பின்வரும் பிரச்சினைகள் தொடர்பில் அதன் குறியீட்டை இடுவதன் மூலம் குறுஞ் செய்தியினை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் நிலைமைகள்:

A-சுவாசிப்பதில் சிக்கல் நிலை

B-காய்ச்சல் நிலை

C-எவ்வித அறிகுறியும் இல்லை

உதாரணமாக: சுவாசிப்பதில் சிக்கல் நிலை கொண்ட தொற்றாளர் ஒருவர், A<இடைவெளி>வயது<இடைவெளி>தே.அ.அ.<இடைவெளி>முகவரி

என குறிப்பிட்டு, 1904 இற்கு குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும்.

குறுஞ் செய்தி மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால், உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான வைத்தியர் குழாம் அனுப்பி வைக்கப்படும்.

தொற்றாளர்கள் வழங்கும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு, 247 எனும் இலக்கம் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு, நோய் நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி சேவை உள்ளிட்ட ஏனைய சிகிச்சை வசதிகளும் வழங்கப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு, வைத்தியர் குழுவொன்று 1390 எனும் அதற்கான பிரத்தியேக இலக்கத்தின் மூலம், தொலைபேசி அழைப்பின் ஊடாக தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு உரிய சேவை வழங்கப்படுமென,  கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56