இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

By T. Saranya

02 Sep, 2021 | 01:21 PM
image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 ஆயிரத்து 092 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரவித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,529  ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கொரோனா தொற்றுக்கு தற்போது 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right