சர்வதேச மகளிர் கிரிக்கெட் நட்சத்திரங்களின் பங்கேற்புடன் இலங்கை கிரிக்கெட் மகளிர் டி-20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தப் போட்டிக்கு ‘Lanka Women’s Super League T20’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த லீக்கை ஒக்டோபர் மாதம் தம்புள்ளை அல்லது பல்லேகலவில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் எதிர்பார்த்துள்ளது.

ஒரு அணியில் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீரர்களுடன் நான்கு அணியில் போட்டில் பலப்பரீட்சை நடத்தும்.

இந்த லீக்கை கையாள, இலங்கை கிரிக்கெட் தற்சமயம் விளையாட்டு சந்தைப்படுத்தல்/ மேலாண்மை நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி எதிர்வரும் செப்டெம்பர் 7 பிற்பகல் 01.00 மணியுடன் நிறைவடையும் என்றும் இலங்கை கிரிக்கெட் கூறியுள்ளது.