தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு ஆகியோரின் வருகை பிற்போடப்பட்டது

Published By: Digital Desk 2

02 Sep, 2021 | 12:51 PM
image

எம். எம். சில்வெஸ்டர்

டோக்கியோ பராலிம்பிக்கில் பதக்கம்  வென்று இலங்கை திருநாட்டுக்கு பெருமை சேர்த்த தினேஷ் பிரியன்த மற்றும் துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் நாளை அதிகாலை 3 மணிக்கு வருவதாக இருந்தபோதிலும் அவர்களின் வருகை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக இலங்கை பராலிம்பிக்  குழுவின் உப தலைவர் பிரியன்த பீரிஸ் தெரிவித்தார்.

டோக்கியோ பராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தினேஷ் பிரியன்த, வெண்கல பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்கு இருவருடனும்  ஏனைய போட்டியாளர்களும் சேர்ந்து வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள்  இருவரினதும் வருகை பிற்போடப்பட்டதாகவும் அவர்களுக்கான வரவேற்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என பிரியன்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

எனினும், படகோட்டப்போட்டியில் பங்கேற்ற பிரியமல் ஜயகொடி மற்றும் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற டி. எஸ்.ஆர். தர்மசேன இருவரும் இன்றைய தினம் நாட்டை வந்தடைவர் என அவர் குறிப்பிட்டார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22