நேரடி ஆய்வு : நா. தனுஜா 

நாடு முடக்கப்பட்டுள்ளமையின் காரணமாக வருமானத்தை இழந்திருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபா நிவாரணத்தொகை அனைவரையும் முறையாகச் சென்றடையாத நிலையில்  தாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கொழும்பு புறக்கோட்டைப் பொதுச்சந்தையில் பணிபுரியும் நாட்கூலித்தொழிலாளர்கள் தமது கஷ்டங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

பாரிய பொதிகளைத் தள்ளுவண்டியில் வைத்து இழுத்துச்செல்லும் தொழிலின் ஊடாக அன்றாடம் சுமார் 2000 ரூபா வருமானத்தை ஈட்டிவந்த மொஹமட் இஷாட் தற்போதைய முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

வாழ்க்கை சுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கடினமான உழைப்பிற்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும்2000 ஆயிரம் ரூபா நிவாரன தொகை எத்ததை நாட்களுக்கு வயிற்று பசியை போக்கும் .

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்துதாக குறிப்பிட்டுக் கொண்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எம்மை போன்று நடுத்தர மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியாது. இன்று பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவது பெரும் போராட்டமாக உள்ளது.ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது கொவிட் தாக்கம் குறைவடைகிறதோ இல்லையோ என்னை போன்று பாதிக்கப்படும் மக்கள் இறக்கும் நிலை உறுதியாக ஏற்படும்.

 

அதே தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண் பிள்ளைகளின் தகப்பனான ஜெயராஜ் இப்போது நாளொன்றில் குடும்பத்தில் ஒருவருக்கான உணவைத் தேடிக்கொள்வதே மிகக் கடினமான விடயமாக மாறியிருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார். 

 

குடும்ப வறுமை காரணமாக தலவாக்கலயில் இருந்து வந்து புறக்கோட்டையில் நாட்டாமி தொழில் செய்கிறேன். கொவிட் தாக்கத்தினால் சொல்லான துயரங்களை எதிர்க் கொண்டுள்ளேன். 

பணம் அனுப்புமாறு வீட்டில் உள்ளவர்கள் தொலைப்பேசியில் அழைத்து குறிப்பிடுகிறார்க்ள. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதற்கு கையில் பணமில்லை. இவ்வாறான நிலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வாறு பணம் அனுப்புவது. இவ்வாறான நெருக்கடி நிலையை இதற்கு முன்னர் எதிர்க் கொள்ளவில்லை.  வாழ்வது பெரும் போராட்டமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

   

அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருமாறு வீட்டில் உள்ளவர்கள் குறிப்பிடுகிறார்கள். கொவிட் தாக்கத்தினால் மக்கள்  பொருட்களை கொள்வனவு செய்வதையும் தவிர்து விடுகிறார்கள.கொவிட் தாக்கத்தினாலும் ஊரடங்கு சட்டத்தினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பதற்காக நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தாலும்கூடஇமறுபுறம் மக்கள் பட்டினியினால் உயிரிழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் விசனம் வெளியிடுகின்றனர்.