அமெரிக்காவில் வீசிய “ ஐடா ” சூறாவளியால் ஏற்பட்ட மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் நியூயோர்க்கில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் சுரங்கப்பாதைகள் ரயில் நிலையங்கள், வீடுகள் மற்றும் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதைக் காணக்ககூடியதாக உள்ளது.
பாசாய்க் பகுதியில் சூறாவளியால் 09 வீடுகள் சேதமடைந்ததோடு, நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததையடுத்து நியூஜெர்சி மாநிலத்திலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூஜெர்சி மாநிலத்தில் கெர்னி பகுதியில் தபால் நிலைய கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்துள்ளதோடு, கட்டிடத்திலுள்ள மக்களை மீட்க மீட்பு பணிகள் இடம் பெற்று வருகிறது.
நியூயோர்க்கிலுள்ள பூங்காவில் ஒரு மணி நேரத்தில் 3.15 அங்குலம் (8 செமீ) மழை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
நியூயோர்க் பொலிஸார் மக்களை வீதிகளில் இருக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
பெரும்பாவான சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சியில் ரயில் சேவைகள் மற்றும் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
லூசியானா மாநிலத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்துள்ளன.
குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ் நகரம் பெரியளவில் பாதிக்கப்பட்டு, மின் கம்பங்களும் மரங்களும் சாய்ந்ததால் மின் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM