காட்டுத் தீ காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியாவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

அதேநேரம் கலிபோர்னியாவின், கால்டோர் தீயை எதிர்த்துப் போராடுவதற்கு உள்ளூர் பதிலளிப்பவர்களின் முயற்சிகளை அதிகரிக்க கூட்டாட்சி உதவிக்கும் பைடன் உத்தரவிட்டார் என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை கூறியது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் துயரங்களை போக்கவும் மற்றும் தேவையான அவசர நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கவும் அனைத்து பேரிடர் நிவாரண முயற்சிகளையும் ஒருங்கிணைக்க அங்கீகாரம் அளிக்கிறது.

கால்டோர் தீ காரணமாக கலிபோர்னியா மற்றும் நெவாடாவில் உள்ள வீடுகளை விட்டு வெளியேற சுமார் 50,000 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் வரலாற்றில் மிகப் பெரிய கால்டோர் தீ ஆகஸ்ட் 14 முதல் எல் டொராடோவில் எரிந்து கொண்டிருக்கிறது.

இது 200,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இதுவரை தீக்கிரையாக்கிவிட்டதாக கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறையினர் கூறுகின்றனர்.

தீ இப்போது தஹோ ஏரிக்கு அருகில் உள்ள நெவாடாவின் எல்லையை நோக்கி முன்னேறி வருகிறது.