பெங்களூரில் இன்று காலை 11 மணியில் இருந்து இதுவரை 90 இற்கும் மேற்பட்ட பஸ், லொரிகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட பஸ், லொரிகளை தேடித் தேடி வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மைசூர் வீதியில் அமைந்துள்ள லொரிகள் தரிப்பிடத்தில் 27 லொரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 பஸ், லொரிகளும் அதில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளுடன் தீயிற்கு இரையாகியுள்ளது.
மேலும் கே.பி.என் நிறுவனத்துக்கு சொந்தமான டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 50 பஸ்கள் எரிக்கப்பட்டன. பணிமனைக்குள் புகுந்த கன்னட அமைப்பினர் பஸ்களுக்கு தீ வைத்தனர்.
பெங்களூரில் பஸ்கள், லொரிகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
பெங்களூரு் நகர சட்டம்-ஒழுங்கு பொலிஸின் கட்டுப்பாட்டில் இல்லாததால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு காப்பதே மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது. உச்சநீதிமன்றம் எச்சரிக்கையையும் மீறி சட்டம்-ஒழுங்கை காக்க கர்நாடக அரசு தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM