நீர்வீழ்ச்சி அருகே ஆபாசம் : பெண் ஒருவரால் காட்சிகள் இணையத்தில் பதிவேற்றம் ! 

02 Sep, 2021 | 08:15 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

‘ தம்சக் மன்றம் ‘ எனும் அமைப்பின் தலைவர் பஸ்ஸரமுல்லே தயாவங்ச தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் எழுத்துமூலம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை கோரிய பின்னணியிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பிரயாணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் இளம் ஜோடி ஒன்று, இவ்வாறு ஆபாச காட்சிகளை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளமையானது இலங்கையின் கலாசார விழுமியங்கள் தொடர்பில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள பஸ்ஸரமுல்லே தயாவங்ச தேரர், குறித்த ஜோடி இதற்கு முன்னரும் சுற்றுலா தளமான மீ முரே பகுதியிலும் இவ்வாறு ஆபாச காணொளி தயரித்து பணம் சம்பாதிக்க இணையத்தில் பதிவேற்றியுள்ளதாக சுட்டிக்கடடியுள்ளார்.

அதனால் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த தேரர் கோரியிருந்தார்.

இந் நிலையிலேயே இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு இவ்விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் ஆபாச காணொளியை தயார் செய்து பெண் ஒருவரே இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த ஆபாச காணொளியை பெண் ஒருவரே இணையத்தில் பதிவேற்றியுள்ளமை தெரிய வந்துள்ள நிலையில் சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41