(ப.பன்னீர்செல்வம்)

திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

4908 குடும்பங்களைச்சேர்ந்த் 16 201 பேர் இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

பொலநறுவை, வெலிகந்த பிரதேசம் வரட்சியால் கடும்  பாதிக்கப்புகளை எதிர்நோக்கியுள்ளது. அப் பிரதேசத்தில் 4096 குடும்பங்களைச் சேர்ந்த 13 302 பேர் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு பொலநறுவை மாவட்டத்தில் தமன் கடுவ, திம்புலாகல இலங்காபுர போன்ற பிரதேசங்களிலும் கடும் வரட்சியால் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.