(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான சீனி தொகையை லங்கா சதொச, கூட்டுறவு மற்றும் க்யூ-சொப் ஆகிய விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண விலைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.என வர்த்தகத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

May be an image of 3 people, people standing and outdoors

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சட்டவிரோதமான முறையில் சீனி பதுக்கி வைக்கப்பட்டதால்  சந்தையில் சீனியின் விற்பனை விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரது ஆலோசனைக்கு அமைய நுகர்வோர் அதிகார சபையினர் கடந்த  வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.

May be an image of one or more people, people standing and outdoors

சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான சீனி தொகை மற்றும், சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலைகள் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு  அத்தியாவசிய சேவை  ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரால் எம்.டி.எஸ்.பி.நிவுன்ஹெல்லவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரிச்சலுகை கிடைக்கப் பெற்றதுடன்  சீனி இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட சீனி தொகை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.கைப்பற்றப்பட்ட சீனி தொகை மானிய அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு லங்கா சதொச,  கூட்டுறவு , க்யூ சொப் விற்பனை நிலையங்கள் ஊடாக  விற்பளை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளன.