நள்ளிரவில் கிரமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் அல்லோலகல்லோலம்

Published By: Gayathri

01 Sep, 2021 | 05:25 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 காட்டு யானைகளால் மக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டதாகவும், யானைகள் கிராமத்தில் மக்கள் செய்கை பண்ணப்பட்டிருந்த மரவெள்ளி, தென்னை, மா, பலா போன்ற பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்கிழமை(31) இரவு 8 மணியளவில் அக்கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அங்கிருந்து பயிர்களை துவம்சம் செய்து வேளை மக்கள் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், உரத்த குரலில் சத்தமிட்டும், விரட்டியுள்ளனர். பின்னர் இரவு 11 மணியளவில் தான் கிராமத்தை விட்டு துரத்தியுள்ளனர்.

பின்னர் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் அக்கிராமத்திற்குள் புகுந்த அதே காட்டுயானைகள் அங்கு மக்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மரவெள்ளி தென்னை, மா, மற்றும் பலா போன்ற பயிர்களை முற்றாக அழித்து துவம்சம் செய்துவிட்டு அதிகாலை 5 மணியளவிலதான் கிராமத்தை விட்டு நகர்ந்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமது கிராமத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அழிவுகளும், இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும், அதுபற்றி இன்னும் தமக்குரிய தீர்க்கமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்காசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25