தோட்டத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதில் முன்னுரிமை வழங்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பிடம் செந்தில் கோரிக்கை

By T Yuwaraj

01 Sep, 2021 | 04:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். அது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியுடனான சந்திப்பில் எடுத்துக் கூறியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Articles Tagged Under: செந்தில் தொண்டமான் | Virakesari.lk

உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதியான வைத்தியர் அலக்காங்சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிதியான வைத்தியர் அலக்காங்சிங்கை சந்தித்து கலந்துரையாடினோம்.

இந்த சந்திப்பில் என்னுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையிலும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனெனில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்றவகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பிரதான கடமை.

அதனால் அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் விடயத்தில் முன்னுரிமை வழங்கவேண்டியதன் தேவை தொடர்பாக எடுத்துக்கூறினோம். 

குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவாக தடுப்பூசி வழங்கவேண்டும் என்பதை நாங்கள் எடுத்துகூறியதை உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக எமக்கு உத்தரவாதம் வழங்கினார்.

அத்துடன் கொவிட் தொற்று இன்னும் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என யாருக்கும் தெரியாது. வைரஸ் பலவையான திரிபுகளாக மாறிவருகின்றது.

அதனால் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கொவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான வழிகாட்டல் ஒன்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மலையகத்தில் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம். அதுதொடர்பாக கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கும் இதன்போது இனக்கம் தெரிவிக்கப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கடன் விவகாரம் இந்தியா சீனாவிற்கு...

2022-09-30 11:36:16
news-image

ஐநாவுடன் ஒத்துழைத்தமைக்காக இலங்கை உட்பட 42...

2022-09-30 11:11:16
news-image

நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது...

2022-09-30 10:53:40
news-image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர...

2022-09-30 12:07:36
news-image

நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு...

2022-09-30 10:44:59
news-image

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின்...

2022-09-30 10:26:22
news-image

டொலர் இன்மையினால் கரையோர புகையிரதத்தில் வேகத்தை...

2022-09-30 10:20:10
news-image

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின்...

2022-09-30 10:16:49
news-image

ஆயுதங்களுடன் இருவர் கைது

2022-09-30 10:11:13
news-image

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி...

2022-09-30 10:47:34
news-image

கோட்டாவின் நிழல் அரசாங்கமே தற்போதும் நாட்டை...

2022-09-30 10:39:31
news-image

“ வானமே எல்லை ” -...

2022-09-30 10:21:48