(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையின்போது அதனைக் கட்டுப்படுத்துவதில் வைத்தியநிபுணர் ஜயருவன் பண்டார முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் வைத்தியநிபுணர்கள் பலரும் கருத்து வெளியிடுகின்றனர். 

Articles Tagged Under: ஜே.சி.அலவத்துவல | Virakesari.lk

அதேபோன்று பொதுமக்கள் மீதான அக்கறையின் அடிப்படையில் ஜயருவன் பண்டாரவினால் வெளியிடப்பட்ட கருத்திற்காக அவரைக் குற்றவிசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் உண்மையைப்பேசும் அனைவரும் குற்றவிசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படுகின்றார்கள் என்பது தெளிவாகியிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:  

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் முதலாவது அலையின்போது அதனைக் கட்டுப்படுத்துவதில் வைத்தியநிபுணர் ஜயருவன் பண்டார முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதனால் பொதுமக்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் வைத்தியநிபுணர்கள் பலரும் கருத்து வெளியிட்டார்கள்.

அதேபோன்றுதான் ஜயருவன் பண்டாரவும் அவரறிந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்வதற்கான பரிசோதனைக்கு பெருமளவான கட்டணம் செலுத்தவேண்டியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டார். 

அதற்கான அவரைக் குற்றவிசாரணைப் பிரிவிற்கு அழைப்பதன் மூலம், உண்மையைப்பேசும் அனைவரும் குற்றவிசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படுகின்றார்கள் என்பது தெளிவாகியிருக்கின்றது என்றார்.