(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் காலத்தில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதுதொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவிலும் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.