(எம்.மனோசித்ரா)

மாரவில பொலிஸ் பிரிவில் மஹவௌ வாவியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

மஹவெவ வாவியில் நீராடச் சென்ற இளைஞன் நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து குறித்த இளைஞனை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இன்று புதன்கிழமை முற்பகல் வரை குறித்த இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இலங்கை கடற்படையின் சுழியோடிகளின் ஒத்துழைப்புடன் மாரவில பொலிஸார் நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை தேடும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.