ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி சஜித் கடிதம்

By Vishnu

02 Sep, 2021 | 12:47 PM
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரி 12,  முதல் இன்று வரை 232 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க ஒரு நேர்மையான மனிதராகவும், உண்மையைப் பேசும் மனிதராகவும் கருதப்படுகிறார். அவர் அரசியலில் அல்லது வேறு எந்த முறைகேடு அல்லது ஊழலிலும் ஈடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் அவரை விடுவிப்பதில் தலையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இது போன்ற பல கோரிக்கைகளும் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட தரப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக என்னிடமும் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் சஜித் பிரேமதாச அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right