பாகிஸ்தானில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து சிவில் சமூக குழு கவலை

Published By: Gayathri

01 Sep, 2021 | 12:36 PM
image

இஸ்லாமாபாத் : பாக்கிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு  கவலை வெளியிட்டுள்ளதாக  அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், பாகிஸ்தான்  துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ஆர். நசீரா இக்பால் இவ்விடயம் குறித்து கருத்து ‍வெளியிடுகையில், 

பாகிஸ்தானில் ஆண்களும், பெண்களும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நாட்டின் நிறுவனர் தந்தை முஹம்மது அலி ஜின்னா விரும்பினார். ஆனால் அவருடைய பார்வையில் நாங்கள் செயல்பட தவறிவிட்டோம்.

ஒரு வளமான பாகிஸ்தானுக்கு பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம் என்கிறார். 

அதேவேளை பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் பாக்கிஸ்தான் தலைவர் யாஸ்மின் லாரி, சமீபத்திய மினார்-இ-பாகிஸ்தான் சம்பவம் எங்கள் அரசுக்கும் எங்கள் குற்றவியல் நீதி அமைப்புக்கும் ஒரு சோதனை வழக்கு என்று  தெரிவித்துள்ளார்.

பெண்களுடனான பாரபட்சமான நடத்தையை முடிவுக்குக்கொண்டுவர ஐநா அளித்த வழிகாட்டுதல்களின்படி அரசாங்கம் செயற்படவேண்டும் என்றும் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி இதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (HRCP) வெளியிட்ட ஆண்டறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில், பாகிஸ்தானில் பின்தங்கிய சமூகங்களை பாதிக்கும் பல சிக்கல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் பாலின பாகுபாடு நிலவுவதால், பெண்களின் நிலைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலின ஏற்றத்தாழ்வு குற்றங்களின் துணைப்பிரிவுகளில் கூட காணப்படுகிறது. உதாரணமாக, மத சிறுபான்மையினரை துன்புறுத்துவது, கட்டாய மதமாற்றம் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதேபோன்று பெண்களை குறிவைக்கும் பிற மனித உரிமை மீறல்களில் குழந்தை திருமணம் மற்றும் கெளரவக் கொலைகள் ஆகியவை அடங்கும்.

இது ஆண்களையும் பாதிக்கும் என்றாலும், நிபுணர்களின் கருத்துப்படி பெண்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அடிபணியவைத்தல் மையமாகக்கொண்டு பார்க்கும்போது பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான இவ்வாறான  பாரபட்சமான செயற்பாடுகளை  முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின்  ஐ.நா  வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில்  அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி இதுதான் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24