வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் எதிர்வரும் வியாழன்(15) மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(16) முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் வியாழக்கிழமை மு.ப 8 மணிக்கு முல்லைத்தீவிலும் வெள்ளிக்கிழமையன்று பி.ப. 1 மணிக்கு வவுனியாவிலும், மு.ப. 8 மணிக்கு மன்னாரிலும், பி.ப. 4 மணிக்கு கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் இவ்வாரம் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறமாட்டாது.

இதேவேளை எதிர்காலத்தில்  வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.