இலங்கையில் அறிமுகமாகியுள்ள கார்ட்போர்ட் பிரேதப்பெட்டிகள் - நேரடி ரிப்போர்ட்

Published By: Digital Desk 2

01 Sep, 2021 | 05:58 PM
image

இலங்கையில் தற்போது கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அதிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. 

இந்நிலையிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சடுதியாக அதிகரிப்பதோடு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களது சடலங்களை தகனம் செய்வதிலும் அடக்கம் செய்வதிலும் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன.

குறிப்பாக சடலங்களை பிரேதப்பெட்டிகளில் வைத்து தகனம் செய்யும் போதோ அல்லது அடக்கம் செய்யும் போதோ பாரிய நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்நிலையிலேயே இதற்கான தீர்வை வழங்கும் வகையில் இலங்கையில் கார்ட்போர்ட் பிரேதப்பெட்டிகள் அறிமுகமாகி பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இரத்மலானையில் அமைந்துள்ள கார்ட்போர்ட் உற்பத்தி பொருட்களை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று  தற்போது வழமைக்கு மாறாக தயாரித்துள்ள கார்ட்போர்ட் பிரேதப்பெட்டி பலராலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

வழமையாக மரப்பலகையை கொண்டு தயாரிக்கப்படும் பிரேதப் பெட்டிகளுக்கு 30 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரை செலவாகின்றது. ஆனால் இந்த கார்ட்போர்ட் பிரேதப் பெட்டிகளை தயாரிப்பதற்கு  4,500 ரூபா மாத்திரமே செலவாகின்றது.



இந்நிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர் பிரியந்த சஹ பந்து,


இந்த முயற்சி தெஹிவளை நகர சபையின் உதவியுடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாம் இதன் ஆரம்பகட்டத்தில் தான் இருக்கின்றோம். இதனை தயார் செய்வதற்கு 15 தொடக்கம் 30 நிமிடங்கள் போதுமானதாக உள்ளது. இதற்கு மூலப்பொருளாக பழைய கடதாசிகளும் Chemifix  பசையுமே பயன்படுத்தப்படுகின்றன.



இது குறிப்பாக 3R முறையினை அடிப்படையாகக் கொண்டே தயார்படுத்தபடுகின்றது. இவை பழுதடைந்த கார்ட்போர்ட் பெட்டிகள்  மற்றும் பயன்படுத்தப்பட்ட கடதாசிகளினால் உருவாக்கப்படுகின்றன. இதனால் காடுகளில் மரங்கள் பெருமளவில் அழிக்கப்படுவதை எம்மால் தவிர்க்க முடியும்.


குறித்த கார்போர்ட் பிரேதப் பெட்டிகள் கிட்டத்தட்ட 100 கிலோ எடையை தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

இதனை பயன்படுத்தும் போது எரிப்பதற்கான செலவு குறைவாக உள்ளது. அத்தோடு சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லை. ஏரிப்பதனால் வெளியேறும் காபனீரோட்சைட் வாயுவும் வழமையை விட குறைவாகவே வெளியேறுகின்றது. 


வழமையான பிரேதப் பெட்டிகளை எரிப்பதற்கு எரிபொருட்களை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம்.

இந்த முயற்சியின் மூலம் அந்த செலவுகளையும் எம்மால் குறைக்க முடிகின்றது. எமது வருங்கால சந்ததியினருக்கு நாம் சுத்தமான சுகமான சூழலை அவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே இந்த புதிய முயற்சிக்கு அனைவரும் வரவேற்பளிக்க வேண்டும். 

எனவே இந்த முயற்சியை  இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் விஸ்தரிக்க கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில்...

2025-03-16 15:50:34
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39