( எஸ்.சதீஸ் )

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்டபொகவந்தலாவ கொ்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலய காணியிலுள்ள மண்ணை லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவிலுள்ள ஆலயத்திற்கு குறித்த வித்தியாலய காணி மண் எடுத்துச்செல்ல அட்டன் வலயகல்வி பணிமனையில் அனுமதி பெற்றுள்ளதாகவும் குறித்த மண்ணை ஆலயத்திற்கு கொட்டபடாமல் வேறு தேவைக்கு பாடசாலையின் காணியின் மண் வெட்டப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை காணியின் மண்ணை அகழ்வதற்கு அட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளரிடம் அனுமதி பெற்று இருக்கவேண்டுமெனவும் அரசாங்க காணியை பேக்கோ இயந்திரம் கொண்டு வெட்டப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பாடசாலையின் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்மெனவும் பெற்றோர்கள் மேலும் விசனம் தெரிவித்தனா்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அட்டன் வலயகல்வி பணிப்பாளா் எஸ்.ஸ்ரீதரனிடம் தொடா்பு கொண்டு கேட்டபோது,

குறித்தபாடசாலையின் காணியிலுள்ள மண்ணை வெட்டுவதற்கு நான் அனுமதி வழங்கியுள்ளேன் ஆனால் பாடசாலை காணியில் காணப்படுகின்ற மண்ணை வெட்டி அகற்றினால் மைதானம் ஒன்று அமையுமென என்னிடம் வித்தியாலயத்தின் அதிபா் தெரிவித்ததற்கு அமையவே நான் அனுமதி வழங்கினேன் என வலயகல்வி பணிப்பாளா் தெரிவித்தானர்.

இந்த விடயம் தொடா்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் தலையிட்டு பாடசாலையின் காணியில் மண்வெட்டுவதை நிறுத்துமாறு பெற்றோர்களும் பழையமாணவா்களும் கோரிக்கை விடுகின்றனா்.