வவுனியாவில் இன்றையதினம் மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனாவால் ஐவர் உயிரிழப்பு ; 95 பேருக்கு கொரோனா  தொற்று | Virakesari.lk

குறித்த இருவரும் சுகவீனம் காரணமாக அவர்களது வீட்டிலேயே மரணமடைந்திருந்த நிலையில்,அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் கோவில்குளம் மற்றும் தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.