(எம்.எப்.எம்.பஸீர்)
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆஜராவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் இன்று எழுத்து மூலம் கோரியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜேகுணவர்தன தலைமையிலான சட்டத்தரணிகள் குழு இன்று சி.ஐ.டி.க்கு சென்று குறித்த எழுத்து மூல கோரிக்கையை முன் வைத்துள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் நடத்திய நேர்காணலில், வைத்தியர் ஜயருவன் பண்டார வெளிப்படுத்திய விடயங்களை மையப்படுத்தி, தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விடயங்களை அறிந்துகொள்வதற்காக வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையிலேயே, வைத்தியர் ஜயருவன் பண்டார, கொவிட் தொடரிலிருந்து மீண்ட பின்னர், தற்போது வைத்திய ஆலோசனை பிரகாரம் கொவிட் நிலைமைக்கு பின்னரான சில சில ஆரோக்கியமற்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு ஓய்வில் உள்ளதாக சட்டத்தரணிகள் சி.ஐ.டி.க்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் 14 நாட்களின் பின்னர் சி.ஐ.டி. எதிர்பார்க்கும் விசாரணைகள் தொடர்பில் அவர் வாக்கு மூலம் வழங்கத் தயார் என இதன்போது எழுத்து மூலம் சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM