செல்லக்கதிர்காமம் அருகில் உள்ள விகாரையொன்றின் பிக்கு ஒருவரை கத்தியால் குத்திய நபரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செல்லக்கதிர்காமம் அருகில் உள்ள விகாரையின் பொறுப்பாளரான சங்கைக்குரிய ரபுக்வெல்ல சன்ஸ்னானந்த என்பவரே, கத்தி குத்துக்கு இலக்கானதோடு சந்தேக நபரை நேற்றிரவு கத்தியுடன் கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி காரியவசம் தெரிவித்தார். 

தாக்கப்பட்ட புத்த பிக்கு கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதோடு பிக்குவின் உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

விகாரைக்கு சொந்தமான காணியொன்றினை, கைது செய்யப்பட்ட நபர் ஆக்கிரமித்திருப்பதனை ஆட்சேபித்து, குறிப்பிட்ட நபருடன் ஏற்பட்ட முறுகல் நிலையே, இத்தாக்குதலுக்கு காரணமென்று, பொலிசார் தெரிவித்தனர்.