சமகாலத்தில் சூழல் தொடர்பில் எம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. வெவ்வேறு தொழிற்துறைகளினூடாக வெளியேற்றப்படும் காபனீரொட்சைட் வாயு அடங்கலாக கழிவுப் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளமை முழு உலகையும் பாதிக்கும் பிரச்சனையாக அமைந்துள்ளது. 

இதன் காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்படும் புவியின் வெப்பநிலையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்த வாயுக்களின் அளவை குறைப்பதை நிறுவனங்கள் தமது பிரதான பொறுப்பாகக் கருதிச் செயலாற்ற வேண்டியுள்ளது. அவ்வாறு, தமது நிறுவனசார் பொறுப்பை முறையாக இனங்கண்டு செயலாற்றும் இந்நாட்டின் முன்னணி ஆடைத் தொழிற்துறைசார் நிறுவனமாக பிரண்டிக்ஸ் (Brandix) நிறுவனத்தைக் குறிப்பிட முடியும். 

இந்நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர் என பல வருடங்களாக விருதுகளை சுவீகரித்துள்ள பிரண்டிக்ஸ்  நிறுவனம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் வியாபித்துள்ள உள்நாட்டு நிறுவனமாகும். சூழலை பாதுகாப்பது தொடர்பில் தமது நிறுவனம் கொண்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்காக பிரண்டிக்ஸ் லங்கா லிமிடட் நிறுவனம் ஆரம்பித்த செயற்திட்டங்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் அந்நிறுவனத்தின் சூழல் பொறியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் மொஹமட் ஜரூக் உடன் உரையாடினோம், 

பிரண்டிக்ஸ் நிறுவனம் சூழல் பாதுகாப்பில் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள் பற்றி குறிப்பிடுவதானால் …

பிரண்டிக்ஸ் நிறுவனதில் சூழல் பாதுகாப்பிற்கான பொதுவான இலக்கொன்று காணப்படுகின்றது. ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கும் ஆக்கபூர்வமான மக்கள்’ என்பது எமது இலக்காகும். ஆக்கபூர்வமான தீர்வுகளை உலகுக்கு வழங்கி வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், பிரண்டிக்ஸ் நிறுவனசார் குடிமகன் எனும் வகையில் சூழல் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகின்றோம். 

இந்தச் செயற்திட்டத்தில் வாயு, நீர் மற்றும் புவி என்ற மூன்று அம்சங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துகின்றோம். இதன் போது நீர் பாவனை தொடர்பில் நாம் கொண்டுள்ள இலக்குகளாக நீர் விரயத்தை குறைப்பது, எமது சகல அங்கத்தவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் இரசாயனப் பொருட்கள் சூழலில் சேர்வதை முற்றாக தடுப்பது போன்றவற்றை குறிப்பிட முடியும். 

வாயுக் கட்டமைப்பைப் பொறுத்தமட்டில், ஆடைத் தொழிற்துறையினூடாக வளிமண்டலத்தில் சேரும் காபன் அளவை பூஜ்ஜிய மட்டத்தில் பேணுவதை   குறிப்பிட முடியும். அதுபோன்று கழிவுப்பொருட்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவது மற்றும் மீள் பயன்பாட்டுக்கு பெறுவது போன்றன புவி தொடர்பில் நாம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளாகும். பல கிளைகளைக் கொண்ட ஆடைக் உற்பத்தி குழுமம் எனும் வகையில் பிரண்டிக்ஸ்  நிறுவனத்தின் பிரதான செயற்பாடாக, உலகில் தினசரி அதிகரித்துச் செல்லும் ஆடை தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாக அமைந்துள்ளது. 

இந்த உற்பத்தி செயற்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், மாபெரும் உற்பத்தி செயற்பாடாகும். இதன் காரணமாக, கழிவுப் பொருட்கள் உருவாக்கம் பெறுவது சாதாரணமானதாகும். இந்த கழிவுகளை முறையாக மீள்சுழற்சிக்குட்படுத்தவும், மீளப் பயன்படுத்தவும் நாம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரையில், உலகில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் காணப்படுகின்றமையால், நீர் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்தி, எமது தொழிற்சாலையினுள் பிளாஸ்ரிக் போத்தல் பாவனையை முழுமையாக நிறுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், உற்பத்திச் செயன்முறையின் போது அசுத்தமடையும் நீரை முறையாக வடிகட்டி தூய்மைப்படுத்திய பின்னர் பகுதியளவு சுத்தமான நீரை மீளப் பயன்படுத்திய பின்னர் சூழலில் கலக்கச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 

வெளியிடப்படும் கழிவுப் பொருட்கள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வெளியேற்றுவதற்கும் வலு நிர்வாகம் தொடர்பில் கவனம் செலுத்தி, எமது தொழிற்சாலையினுள் விரயத்தைக் குறைத்துக் கொள்வதற்கும் அதனூடாக சூழல் பாதுகாப்பான வகையில் பயணத்தை மேற்கொள்ளவும் நாம் எப்போதும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.

பிரண்டிக்ஸ் சூழல் நிலைபேறாண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஏனைய நிகழ்ச்சிகள் பற்றி குறிப்பிடுவதானால் ...

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, நாம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது வாயு. நீர் மற்றும் புவி போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துகின்றோம். இதன் போது, இந்தச் செயற்பாடுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வினைத்திறன் என்பதுடன் சூழல்பாதுகாப்பான அம்சங்களில் கவனம் செலுத்தி அவற்றுக்கு முக்கியத்துவமளித்து செயலாற்றுவது விசேடமானதாகும். 2008 ஆம் ஆண்டில் பிரண்டிக்ஸ் சீதுவ சூழலுக்கு நட்பான தொழிற்சாலைக்கு, சர்வதேச விருது வழங்கப்பட்டிருந்தது. ஜக்கிய அமேரிக்காவின் கட்டட சம்மேளனத்தின் சூழலுககு நட்பான கட்டட கௌரவிப்பு கட்டமைப்பினூடாக “Leed Platinum” சான்றிதழ் வழங்கப்பட்ட முதலாவது ஆடைத் தொழிற்சாலை எனும் அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டது. இந்த கௌரவிப்பு, எமக்கும் இலங்கைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. 

இதனூடாக சூழலுக்கு நட்பான புரட்சி எனும் பரந்த விடயத்தின் கீழ் உலகின் கவனத்தை எம்மீது திருப்பிக் கொள்வதற்கு எம்மால் முடிந்தது. 'பிரண்டிக்ஸ் சூழல் நிலைபேறாண்மை' நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்த போது, பிரதானமாக கவனம் செலுத்தப்பட்ட துறையாக வலுப்பிறப்பாக்கலை குறிப்பிட முடியும். 2008 ஆம் ஆண்டு முதல், பிரதானமாக உற்பத்திச் செயற்பாடுகளை வினைத்திறன் வாய்ந்த வகையில் மேம்படுத்திக் கொள்வதுடன், அதன் போது ஏற்படும் விரயத்தை குறைத்துக் கொள்ளவும் நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இதன் போது 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2012ஆம் ஆண்டளவில், எமது வலுத் தேவையின் 30% ஐ குறைத்துக் கொள்வதற்கு எம்மால் முடிந்தது. 

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில், நாம் சூரிய வலுப் பிறப்பாக்கல் நிகழ்ச்சியை ஆரம்பித்தோம். இதனூடாக தேசிய மின் வலுக் கட்டமைப்புக்கு 8.5 மெகா வோட் வலுவை எம்மால் இணைக்க முடிந்ததுடன், இதன் இரண்டாம் கட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளோம். இன்று வரையில் எமது புதுப்பிக்கத்தக்க வலு உற்பத்தி 67% ஆக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சமாந்தரமாக, 2019 ஆம் ஆண்டில் பிரண்டிக்ஸ் மட்டக்களப்பு தொழிற்சாலைக்கு சர்வதேச கௌரவிப்பு கிடைத்திருந்தது. சூழலுக்கு வெளிப்படுத்தப்படும் காபன் அளவை பூஜ்ஜிய மட்டத்தில் பேணிய உலகின் முதலாவது ஆடைத் தொழிற்சாலையாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தது.

பிரண்டிக்ஸ் காபன் வெளிப்பாடின்றி இயங்கும் நிறுவனமாக தெரிவானமை தொடர்பில் மேலும் தெளிவுபடுத்த முடியுமா ..

எந்தவொரு உற்பத்திச் செயற்பாட்டின் போதும் சூழலுக்கு மாசை ஏற்படுத்தும் வாயு வளிமண்டலத்தில் சேர்கின்றது. எமது உற்பத்தி செயற்பாடுகளிலும் காபனீரொட்சைட் வாயு வெளியேற்றம் நிகழ்கின்றது. இதற்கு தீர்வாக, எமது தொழிற்சாலையினால் வெளியிடப்படும் காபனீரொட்சைட்டுக்கு அளவான வலுச் சக்தியை சூரிய வலுச்சக்தி பிறப்பித்தல் திட்டத்தினூடாக காபனீரொட்சைட் வெளியேற்றம் பூஜ்ஜியமடைகின்றது. 2023 ஆம் ஆண்டளவில் பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகள் அனைத்தையும் இந்த நிலைக்கு மாற்றுவது எமது நோக்காகவும் இலக்காகவும் அமைந்துள்ளது. அதுபோன்று இந்த நிகழ்ச்சிக்கு நிகராக 2008 – 2014 காலப்பகுதியினுள் எரிபொருள் பாவனையினால் இயங்கிய எமது சகல நிராவி பொயிலர்களையும், விறகு எரியூட்டலினூடாக இயங்கும் நிலைக்கு மாற்றியிருந்தமையால் வருடமொன்றுக்கு மூன்று மில்லியன் லீற்றர்கள் வரை எரிபொருலை சேமித்துக் கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.

இந்த சூழலுக்கு நட்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது பிரண்டிக்ஸ் அங்கத்தவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு பற்றி குறிப்பிடுவதானால் ...

இந்த சூழலுக்கு நட்பான செயற்திட்டங்கள் பற்றியும், அந்தத் திட்டங்களினூடாக கிடைக்கும் அனுகூலங்கள் பற்றி நாம் எமது சகல அங்கத்தவர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். இதன் காரணமாக, 50,000க்கு அதிகமான அங்கத்தவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர். இவ்வாறு எமது சூழலுக்கு நட்பான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அங்கத்தவர்கள் முழு ஆதரவையும் வழங்குகின்றனர். அது போன்று இந்தக் கொள்கைகளை சமூகத்தினுள் கொண்டு செல்வதற்கும், அவர்கள் எமது நிலைபேறாண்மையின் தூதுவர்களாக செயற்படுகின்றனர். 

பிரண்டிக்ஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சூழல் மாநாடு தொடர்பில் குறிப்பிட்டு ஏனைய நிறுவனங்களுக்கு இந்த தகவலை வழங்க முடியுமா?. 

உண்மையில் இந்த வருடத்தில் நாம் சூழல் மாநாடொன்றை ஏற்பாடு செய்வதன் பிரதான நோக்கம், ஏனைய நிறுவனங்களுக்கும் இந்த சூழல்சார் கொள்கைகளைப் பற்றிய அறிவூட்டுவது மற்றும் அவர்களையும் இவற்றைப் பின்பற்றச் செய்வதாகும். சூழல்சார் கொள்கைகளுக்கமைய செயலாற்றுவதற்கு பாரியளவில் இயங்கும் நிறுவனங்களுக்கு மாத்திரமே முடியும் எனும் தவறான அபிப்பிராயம் பலர் மத்தியில் நிலவுகின்றது. இந்த நோக்கத்தை இல்லாமல் செய்யும் தேவை எமக்கு பெருமளவில் காணப்பட்டது. அந்த தேவையை நிறைவேற்றுவதைப் போலவே, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சகல தயாரிப்புகளையும் சூழல்சார் கொள்கைக்கமைய உற்பத்தி செய்து, உலகில், இலங்கை உற்பத்திகளுக்கு உயர் கேள்வியை ஏற்படுத்தும் தேவையும் எமக்குக் காணப்படுகின்றது. அதன் காரணமாக, இந்நாட்டின் முன்னணி ஆடை உற்பத்தியாளர் எனும் வகையிலும் சூழல்சார் கொள்கையை முற்றாக பின்பற்றி மிகவும் வெற்றிகரமாக இந்தக் கொள்கையினுள் செயலாற்றும் நிறுவனமாக இந்தக் கொள்கையை செயற்படுத்துவது தொடர்பில் ஏனைய நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். தமக்கு இயலுமானவரை சூழல் கொள்கையை பின்பற்றி சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.