மாட்டு இறைச்சியை உண்டதற்காக இரு பெண்கள் பாலியல் பலாத்காரம்

12 Sep, 2016 | 03:16 PM
image

மாட்டு இறைச்சியை உண்பதற்காக இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், ஹரியானா மாநிலம் மேவாத் நகரில் மாட்டு இறைச்சியை உண்டதற்காக இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு பெண்களும் 2 வாரத்திற்கு முன்பு ஒரு குழுவினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்தப் பெண்களில் ஒருவர், தாங்கள் மாட்டு இறைச்சியினை உண்டதற்காகவே பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அப்பெண்கள் சமூக சேவகர் ஷப்னம் ஹஸ்மி முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் உரையாற்றுகையில் பெண் கூறுகையில்,

எங்களிடம் அந்தக் குழு நீங்கள் மாட்டு இறைச்சியினை சாப்பிடுவீர்களா என்று கேட்டனர். அதற்கு நாங்கள் இல்லை என்று கூறினோம். ஆனால் அவர்கள், இல்லை பொய் சொல்கிறீர்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று கூறி அதற்குத் தண்டனை தான் இது என்று கூறி பலாத்காரம் செய்தனர் என்றார்.

ஆனால் இப்பெண்களோ அல்லது இவர்களின் பெற்றோரோ முதலில் கொடுத்த முறைப்பாட்டில் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் வயது 14, மற்றும் 20 என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு பெண்களும் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி மோத் நகரில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த இருவரும் சகோதரிகளாவர்சம்பவத்தின் போது இவர்களது அத்தையும், மாமாவும்  குறித்த குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21