புத்தளம் தள வைத்தியசாலைக்கு 25 ஒட்சிசன் சிலின்டர்கள் கையளிப்பு

Published By: Digital Desk 4

31 Aug, 2021 | 05:05 PM
image

புத்தளம் தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஒருதொகை ஒட்சிசன் சிலின்டர்கள் நேற்று (30) வழங்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தகர்கள் 33 பேர் கூட்டாக ஒன்றிணைந்து குறித்த ஓட்சிசன் சேமிப்பு சிலின்டர்களை வழங்கியுள்ளனர்.

இதன்போது   25 ஒட்சிசன் சேமிப்பு சிலின்டர்கள் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியவர் எச்.ஜே.எம்.அர்ஜூன துஷன்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட குறித்த ஒட்சிசன் சிலின்டர்களை சேமித்து வைத்து புத்தளம் தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப்பிரிவில் தங்கிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது அதனை பயன்படுத்திக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என வைத்தியர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இந்த ஒட்சிசன் சிலின்டர்கள் வழங்கும் நிகழ்வில் புத்தளம் தள வைத்தியாசலை இருதய வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேன் பொரளஸ்ஸ, உடல் கூற்று விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் யு.டி.என்.பிரசாத், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் கே.பி.ஐ.மல்காந்தி உட்பட வைத்தியர்கள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25 13:05:29
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-01-25 13:08:42
news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

குளிரிலும் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப்...

2026-01-25 12:32:31
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59