வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் (30) மாலை குறித்த குழந்தை தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மரணடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா பம்மைமடு பகுதியை சேர்ந்த சுயந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.