(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பினும் கூட, இவ்விவகாரத்திற்கு இயலுமானளவு விரைந்து தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரச கட்டமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் செயற்திறன்மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுவிடயத்தில் இயலுமான உதவிகளை வழங்குமாறு சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
மேலும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்குத் தீவிர முனைப்புடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தயாராக இருக்கின்றது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி திங்கட்கிழமையன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இணையவழிக்கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட புதிய நியமனங்களைத் தொடர்ந்து, கடந்த 6 மாதகாலப்பகுதியில் அலுவலகத்தின் செயற்பாடுகள் மேலும் முன்னேற்றமடைந்திருக்கின்றன.
இதுவரையான காலப்பகுதியில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த முறைப்பாடுகள் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டியதன் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM