இராஜதுரை ஹஷான்

துறைமுகத்தில் தேங்கியுள்ள 2187 மெற்றிக்தொன் சீனி அடங்கியுள்ள 81 கொள்கலன்களை கட்டணமில்லாமல் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

டொலர் பெறுமதி அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைச்சரவை மட்டத்தில் தீர்வு காண எதிர்பார்க்கப்பட்டுள்ளது என துறைமுக மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இவற்றை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக மானிய விலையின் அடிப்படையில் விநியோகிக்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் அரசாங்கமும், நாட்டு மக்களும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேளையில் ஒரு சில மாபியாக்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து , அப்பொருளுக்கான கேள்வி சந்தையில் அதிகரிக்கும் போது அதனை அதிக விலைக்கு விற்கிறார்கள். 

சீனியின் விற்பனை விலையும் இவ்வாறே அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.