கொவிட்-19 இல் இருந்து மீண்ட குசல் அணிக்கு திரும்பினார்

Published By: Vishnu

31 Aug, 2021 | 01:40 PM
image

கொவிட்-19 இல் இருந்து குணமடைந்த பின்னர், செப்டெம்பர் 2 ஆரம்பமாகும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான இலங்கை அணியில் குசல் பெரேரா இடம்பெற்றுள்ளார்.

Image

அதேநேரம் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் தினேஷ் சந்திமால் மற்றும் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் ஆகியோரும்  அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

தோள்பட்டை காயம் காரணமாக ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான உள்ளூர் வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரை தவறவிட்ட பெரேரா இந்த மாதம் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்தார்.

இந் நிலையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுள்ள குசல் பெரேரா அணிக்கு திரும்பியுள்ள போதிலும், உடற் தகுதியில் முன்னேற வேண்டியுள்ளதால் ஒருநாள் தொடர்பில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.

எனினும் அவர் டி-20 தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தேர்வில் இடது கை சுழற்பந்து புலினா தரங்கா மற்றும் பேட்ஸ்மேன் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர், 

இலங்கை கிரிக்கெட் நடத்திய உள்நாட்டு இருபது-20 லீக்கின் போது இருவரும் அதிகளவான கவனத்தை ஈர்த்தனர்.

இதேவேளை இடது கை சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகான் மற்றும் கசுன் ராஜிதா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை தென்னாபிரிக்காவுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36