கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்று தங்கள் பொறுப்பை நிறைவேற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் !

Published By: Digital Desk 2

31 Aug, 2021 | 01:30 PM
image

எம்.ஆர்.எம்.வசீம்

புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியாகும் போது குறிப்பிடத்தக்க அளவு கொவிட் மரணங்கள் குறைவடையும் சாத்தியம் இருக்கின்றது. 

அதற்காக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்தவேண்டும் என வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட் புதிய திரிபுகள் ஏற்படுவது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றோம். வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் உலகில் பெரும்பான்மையான மக்கள் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் வரைக்கும் புதிய திரிபுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. 

மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் செப்டெம்பர் ஆரம்பமாகும் போது நூறு வீதம் பூரணமாகும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொண்டு, மக்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்றவேண்டும். அதன் மூலமே நாட்டில் இலகுவான நிலைமையை ஏற்படுத்துவதற்கு முடியுமாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22