பதுளை வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்த போது மதுசார விளக்கொன்று வெடித்ததில் எற்பட்ட தீ காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தாதியரின் நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.