பொறுப்பை உணர்ந்து செயற்படுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லை என்றால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அமைச்சர் பத்திரண,

ஜனாதிபதி , கொவிட் கட்டுப்பாட்டு செயலணி மற்றும் சுகாதார தரப்பினர் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது குறித்த மதிப்பீடுகளிலேயே அதிக அவதானம் செலுத்துகின்றனர்.

எனவே நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய நிலைமையை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்வதன் மூலம் எதிர்வரும் வாரங்களில் மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம்.

எனினும் மிகக்குறைந்தளவிலான மக்கள் தமது சமூக பொறுப்பை மறந்து செயற்படுகின்றனர். நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இன்றி நிலைமையை முகாமைத்துவம் செய்ய முடியாது என்றார்.

எனவே பொறுப்பை உணர்ந்து செயற்படுமாடு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லை என்றால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.