இறுதி அமெரிக்க விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு, காபூல் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தலிபான் தலைவர்கள் அடையாளமாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

Image

ஆகஸ்ட் 31 நிலவரப்படி, தலிபான்கள் தலைநகரின் விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துள்ளனர்.

இந் நிலையில் தலிபான்கள் அமெரிக்காவுடன் நல்ல இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்க விரும்புவதாகவும் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

"இந்த வெற்றி அனைத்து ஆப்கானியர்களுக்கும் சொந்தமானது, நாங்கள் அமெரிக்காவுடனும் சர்வதேச நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம். அவர்கள் அனைவருடனும் நல்ல இராஜதந்திர உறவை நாங்கள் வரவேற்கிறோம்" என்று ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வொஷிங்டன் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இராணுவப் படைகளை மீளப் பெறுவதை முடித்த பின்னர் கட்டாரின் தோகாவுக்கு தனது இராஜதந்திர செயல்பாட்டு தளத்தை நகர்த்துவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்தார்.

இறுதி அமெரிக்க சி -17 இராணுவ விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3:29 மணிக்கு புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.