இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜெயருவன் பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மருந்துகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறிய கூற்றுக்கள் தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவே சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மருந்து உற்பத்தி மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் மருந்து கையிருப்பு தொடர்பான தரவு காணாமல் போனது தொடர்பான டாக்டர் பண்டாரவின் அறிக்கை குறித்து சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மருந்து உற்பத்தி மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம் மற்றும் அரச மருந்துக் கழகத்தின் தலைவரால் சி.ஐ.டி.க்கு முறைப்பாடு அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.