ஜப்பான் நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவின் 5 பேர் இன்று (12) கெலிவத்தை தோட்டத்தில்  கொழுந்து கொய்யும் பாடநெறிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக இவர்கள் இப்பாட நெறிகளை ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது மலையக தோட்ட தொழிலாளர்கள் இன்றைய நிலையில் கொழுந்து கொய்யும் தொழிலில் எவ்வாறு ஈடுப்படுகின்றனர் என்பதோடு, அவர்களின் வாழ்க்கை நிலையையும் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த ஜப்பானிய மகளிர் கொழுந்து கொய்வதை பார்வையிட்ட தோட்டத்தொழிலாளர்கள் அவர்களை வரவேற்றுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.