இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொடுத்தார் துலான் கொடிதுவக்கு

Published By: Digital Desk 4

30 Aug, 2021 | 05:52 PM
image

(எம். எம். சில்வெஸ்டர்)

டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில் இன்று மாலை இலங்கை இன்னுமொரு பதக்கத்தை  கைப்பற்றியது. ஆண்களுக்கான பிரிவு 64 இன் ஈட்டி ஏறிதல் போட்டியில் பங்கேற்ற துலான் கொடிதுவக்கு 65.61 மீற்றர் தூரம் வீசி வெண்கல பதக்கம் வென்றார்.

No description available.

இந்த போட்டியில் சம்பத் ஹெட்டியாரச்சி மற்றும் துலான் கொடிதுவக்கு ஆகிய இலங்கையர்கள் இருவரும் பங்கேற்றனர். இதில் சம்பத் ஹெட்டியாரச்சி 49.94 மீற்றர் தூரம் எறிந்து 9ஆவது இடத்தை பெற்றார்.

எனினும், துலான் ஒவ்வொரு முயற்சிகளிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதில் மூன்றாவது  முயற்சியில் 65.61 மீற்றர் தூரம் வீசி 5 ஆவது முயற்சி வரை 2 ஆம் நிலையில் இருந்தபோதிலும்  அவுஸ்திரேலியாவின் புரியன் மைக்கல்  6ஆவது கடைசியுமான முயற்சியில் 66.29 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது நிலைக்கு முன்னேறினார். துலானின் கடைசி முயற்சியில் 65.05 மீற்றர் பதிவானது.

இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சுமித் 68.88 மீற்றர் தூரம் வீசி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அவுஸ்திரேலியாவின் புரியன் மைக்கல் வெள்ளிப் பதக்கத்தையும் இலங்கையின் துலான் வெண்கல பதங்கத்தை வென்றெடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37